கயமை
கயமை பற்றி சில பாடல்களை நாம் இப்போது பார்ப்போம். அதில் உள்ள நல்ல தமிழ்ச் சொற்களைத் தெரிந்து கொள்வோம்.
செழும் பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பு அறுக்ககில்லாவாம் தேரை - வழும்பு இல் சீர்
நூல் கற்றற் கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது.
(நாலடியார்)
தவளைகள் குளம், கிணறு போன்றவற்றுள் வாழும். தண்ணீர் அங்கே நிறைய உண்டு. பலகாலம் அந்த நீர்நிலைகளில் அவை வாழ்ந்தாலும் தவளைகள் தம் உடம்பின் மீது உள்ள வழுவழுப்பான மாசைக் கழுவிக் கொள்ளாது.
அதுபோல, கயவர்கள் பல பெரிய நூல்களைப் பலகாலம் கற்று பலரிடம் அந்தக் கருத்துகளைத் தெரிவித்தாலும் - அவற்றின்படி நடக்க மாட்டார்கள். எனவே அவர்கள் உண்மையான கருத்துகளை அறியும் தன்மை இல்லாதவரே.
இன்று நாம் கற்றுக் கொள்ளும் புதிய சொற்கள்
பொய்கை - குளம்
வழும்பு - வழுவழுப்பு
தேரை - தவளை
வழும்பு - குற்றம்
தேர்கிற்கும் - தேர்ந்து அறியும்
பெற்றி - தன்மை
தளிர் மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா
உளிநீரர் மாதோ கயவர் - அளிநீரார்க்கு
என்னானும் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்
(நாலடியார்)
உளியானது தானாகப் போய் ஒரு பொருளை உடைக்காது - சிதைக்காது. யாராவது ஒருவர் மழுவால் தட்டிய பின்னரே உளி செயல்படும். அதுபோல கயவர்கள் பிறர் ஏவாமல் எந்தச் சிறிய தீய தொழிலையும் செய்யமாட்டார். அடித்து வருத்தும் கொடியோருக்கு - தமக்குத் துன்பத்தைச் செய்பவர்களுக்காக எதை வேண்டுமானாலும் கொடுப்பார்கள். அவர்களுக்காக எந்தப் பணியையும் செய்வார்கள்.
புதிய சொற்கள்
தளிர் - கொழுந்து இலை
நீரர் - தன்மையர்
அளி - அருள்
இன்னாங்கு - துன்பம்