Friday, October 15, 2010

WOMEN POET - KAKKAIP PAADINIYAAR - SOME DETAILS

நான் மதுரையில் பிறந்து வளர்ந்தவன்.  மதுரை மாநகராட்சிப் பள்ளி ஒன்றுக்கு காக்கைப்பாடினியார் பள்ளி என்று பெயர் உண்டு.  யார் இவர் என்று யோசிப்பேன்.  ஆனால் இன்று வலைத் தள உலாவின் போது காக்கைப் பாடினியார் பற்றி அருமையான அற்புதமான தகவல் கிடைத்தது.  தமிழ் உலகம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும் மதுரையின் மைந்தர்கள் அறிந்து பெருமைப்பட வேண்டும் என்பதற்காகவும் அந்தக் கட்டுரையை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.  கட்டுரை  வெளி வந்த தளம் http://thamizmandram.blogspot.com/
அந்த தளத்திற்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு அந்த கட்டுரையை அதைப் பதிவு செய்தவர் பெயருடன் தருகிறேன்.     மதுரையில் வசிப்பவர்களுக்கு சில பள்ளிகளுக்கு புலவர்கள் பெயர் வைத்தால் இளங்கோ - உமறுப்புலவர் - அவ்வை போன்று சில புலவர்கள் பெயர் அடிக்கடி நினைவு வருகிறது.   இல்லாவிடில் நமக்கு வள்ளுவரையும் கம்பரையும் பாரதியையும் பாரதிதாசனையும் விட்டால் அதிகமாக புலவர் பெயர்கள் தெரியாது.இந்தப் பதிவினை முனைவர் வாசுதேவன் அவர்கள் அரும்பாடு பாட்டு நமக்கு கொடுத்து இருக்கிறார்.  கட்டுரையை தந்த முனைவர் மு, பழனியப்பன், தமிழ் விரிவுரையாளர்,மா மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை அவர்கள் ஆண் கவிகளுக்கும் பெண் கவிகளுக்கும் கருத்தை வெளியிடுவதில் சில வேறுபாடுகள் உள்ளது எனவும் உலகெங்கும் இது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என்றும் தகவலைக் கூறி பெண்கவியான காக்கைப் பாடிநியாரைப் பற்றிய தனது பதிவினை இவர் தந்து உள்ளார்.  படித்துப் பயனடையுங்கள்.  இந்த அருமையான கட்டுரையை நமக்கு வடித்துத் தந்தவர் முனைவர் மு, பழனியப்பன், தமிழ் விரிவுரையாளர்,
மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை

இவரின் தமிழ் தொண்டு மிகச் சிறப்பானது.  இவருக்கு மிக்க நன்றி.

பெண் ஆண்மொழியில் படைப்பது இல்லை


முனைவர் மு, பழனியப்பன், தமிழ் விரிவுரையாளர்,
மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
*******************************
சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் பதிற்றுப்பத்து ஒரு குறிப்பிடத்தகுந்த நூல்.

இதனுள் அமைந்துள்ள ஆறாம் பத்து காக்கைப் பாடினி நச்செள்ளையாரால் பாடப் பெற்றது என்பது கருதி இத்தொகை நூலுக்கு மேலும் ஒரு பெருமை உண்டு. ஒன்பது ஆண்பால் புலவர்களின் வரிசையில் ஒரு பெண்பால் புலவர் இடம்பெற்றுள்ளார். இவர் பாடிய பத்துப்பாடல்களால் மகிழ்ந்த சேரன் இவரைத் தன் அவையில் அவைக்களப் புலவராக அமைத்துக் கொண்டான்.

மேலும் ஒன்பது கால் பொன்னும் பரிசாகத் தந்துள்ளான் என்ற குறிப்புகள் வழியாகப் பெண்பால் புலவர் ஒருவர் ஆண்பால் புலவர்களுக்கு ஈடான நிலையில் சங்க காலத்தில் அறிவாலும், ஆற்றலாலும், ஆளுமையாலும் சிறந்து விளங்கினார் என்பதற்குச் சரியான சான்று இவர் ஆவார்.

அறிவாலும், ஆற்றலாலும், ஆளுமையாலும் சிறந்தவள் பெண் என்பது ஆண்களுக்கு ஈடான நிலை தரும் என்றாலும்¢ அவள் தன் படைப்பு மொழியை, முயற்சியை ஆண்களுக்குச் சமமாக அல்லது ஆண்களை அடியொற்றிச் செய்து கொள்ளவில்லை என்பது பெண்ணின் படைப்பினை ஆராயும் பொழுது தெரியவருகிறது.

அவள் ஆணால் உருவாக்கப் பெற்ற மொழியை அதன் அமைப்பைத் தனக்கு ஏற்ற வகையில் தன் நடையில் மாற்றி அமைத்துக் கொண்டு படைக்கத் தொடங்கினாள்.

மொழி என்னும் கட்டமைப்பிற்குள் தனக்குச் சாதகமான ஓர் இடத்தை அவள் பெற்றுக் கொண்டு அவள் செயல்பட்டாள். இதன்மூலம் அவள் தன்னையும் தனித்து வெளிப்படுத்திக் கொள்ள முடிந்தது. தன்ஒத்த பாலினரின் இயல்பையும் அவளால் படைக்க முடிந்தது. இந்த வேறுபாடு கருதி தன் பாலினருடன் அவள் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணிக் கொள்ள முடிந்திருக்கிறது. இதன் காரணமாக அவளின் படைப்பு மொழியில் பல நுண்மையான வேறுபாடுகள் எழுந்தன.

மேற்சொன்ன ஆறாம் பத்து இதற்குச் சிறந்த காட்டு. இதில் உள்ள பத்துப் பாடல்களிலும் காக்கைப் பாடினி நச்செள்ளை என்ற பெண் தன்கருத்தை தனக்குச் சாதகமான ஆண் வயப்படாத பெண் மொழியில் எடுத்துரைத்துள்ளார். அவரின் மொழி பயன்பாடு மற்ற ஏழு அல்லது கிடைக்காத பத்துக்கள் இரண்டையும் சேர்த்து ஒன்பது பத்துக்கள் பாடிய ஆண்பால் புலவர்களின் படைப்பு அமைதியில் இருந்து வேறுபட்டு அமைகிறது.

ஆயிரத்து ஐநூற்று எண்பத்து இரண்டாம் ஆண்டிலேயே பெண் மொழி ஆளுமை ஆணின் மொழியாளுமையில் இருந்து வேறுபட்டது என்பது உலக அளவில் கண்டறியப் பட்ட போதிலும் அதனை மெய்ப்பிக்கும் சான்றுகளுக்கான முயற்சி தொடங்கப் படவில்லை.

ஆனால் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டில் ராபின் லாக்ஆப், அன்னி பாடைன், ரூத் பெர்ன்டு, நான்சி கான்கிளின் (Robin Lakoff, Anne Bodine, Ruth Brend, and Nancy Conklin) என்போர் இ¢ம்முயற்சியில் தீவிரமாக இறங்கினர். அவர்கள் பெண்கள் பயன்படுத்திய அமெரிக்க ஆங்கில பெண் மொழியில் உள்ள தனித்தன்மைகளை எடுத்துக் காட்டினர்.

அது மெல்ல வளர்ந்து உலக மொழிகளில் உள்ள பெண்தன்மைக் கூறுகளின் பொதுமையை ஆராயத் தொடங்கியது. ''மொழியில் பால் வேறுபாடு என்பது உலகுதழுவிய ஒன்று'' என்ற கொள்கை ("Sex differentiation in language is universal . . .") இதன்வழி உருவானது. இதன் வளர்ச்சி நிலை பெண் மொழி என்பதற்கான வரையறையைத் தந்தது. மொழியில் பாலினக்கூறுகளை உள்ளடக்கிய ஒன்றாக இதன்பின் பெண் மொழி உணர்ப்பட்டது(''If, then, one uses the term loosely to cover those gender-preferred features, there is a "women's language.") இவ்வடிப்படையில் உணரத் தொடங்கப் பட்ட பெண்மொழி உலகின் அனைத்து மொழிகளிலும் உணரப்பட ஆய்வுகள் தொடங்கின.

அவ்வகையில் பெண்மொழி என்பது தமிழுலகிலும் உணரப் பட வேண்டிய ஒன்றே.பதிற்றுப் பத்து இவ்வகையில் ஆராயப் படத் தக்க ஒன்று. ஏனெனில் இத்தொகுப்பில் ஆண் படைப்பும் அமைந்துள்ளது. பெண்படைப்பும் அமைந்துள்ளது. இவையிரண்டிற்கும் ஒரே பின்புலம்.

ஒரே கொள்கை. ஒரே எல்லை என்ற பல ஒற்றுமைக் கூறுகள் கிடைத்திருப்பது ஆண்மொழியையும் பெண் மொழியையும் உற்று நோக்கி ஆராய உதவுகிறது.

காக்கைப் பாடினியின் பெண்மொழிக் கூற்றிற்கு முதலில் சான்று காண்போம்.''இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்தவளங்கெழு குடைச் சூலடங்கிய கொள்கைஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசைஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும்\ இரவலர் புண்கண் அஞ்சும்'' (காக்கைப் பாடினி 2ம் பத்து ஏழாம் பாடல் வரிகள் 10-15)இப்பாடலடிகளில் கவனிக்கத் தக்கவை இருகூறுகள்.

1. மகளிர் 2. வளங்கெழு குடைச்சூல்மகளிர் இளமையும் துணையாகும் தன்மையும் உடைய புதல்வரைப் பெற்று நல்வளம் பயந்தவர்கள். ஆன்ற அறிவினர். நல்ல புகழினர். ஒள்ளிய நெற்றியை உடையோர். புலவியின் காரணமாக கண்கள் கோபத்தை வெளிப்படுத்தும். இக்கருத்துகளில் புதல்வர் யாருக்கு நல்வளம் பயக்க இருக்கிறார்கள்? என்ற கருத்து சிந்திக்கத் தக்கது. ''கணவன் உவப்பப் புதல்வர் பயந்து'' (மதுரைக் காஞ்சி 600) என்பது மாங்குடி மருதனாரின் கூற்று.

கணவன் மகிழ்வு கொள்வதற்காக மகனைப் பெற்றாள் என்பது ஆணின் கூற்று. தனக்குத் துணையாகும் தன்மை உடைய மகனைப் பெற்றவள் என்பது பெண்மொழி. ஆண்மொழிக்கும் பெண் மொழிக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு இதுதான். பெண் தன் சொற்களுக்குள் அன்பை வைக்கிறாள். ஆண் தன் சொற்களுக்குள் காமத்தை வைக்கிறான். கணவனின் உவப்ப எதற்காக-? என்ற சிந்தனையை மேம்படுத்திப் பார்த்தால் இதன் உண்மை புரியும்.


அது மெல்ல வளர்ந்து உலக மொழிகளில் உள்ள பெண்தன்மைக் கூறுகளின் பொதுமையை ஆராயத் தொடங்கியது. ''மொழியில் பால் வேறுபாடு என்பது உலகுதழுவிய ஒன்று'' என்ற கொள்கை ("Sex differentiation in language is universal . . .") இதன்வழி உருவானது. இதன் வளர்ச்சி நிலை பெண் மொழி என்பதற்கான வரையறையைத் தந்தது.

மொழியில் பாலினக்கூறுகளை உள்ளடக்கிய ஒன்றாக இதன்பின் பெண் மொழி உணர்ப்பட்டது(''If, then, one uses the term loosely to cover those gender-preferred features, there is a "women's language.") இவ்வடிப்படையில் உணரத் தொடங்கப் பட்ட பெண்மொழி உலகின் அனைத்து மொழிகளிலும் உணரப்பட ஆய்வுகள் தொடங்கின. அவ்வகையில் பெண்மொழி என்பது தமிழுலகிலும் உணரப் பட வேண்டிய ஒன்றே.பதிற்றுப் பத்து இவ்வகையில் ஆராயப் படத் தக்க ஒன்று.

ஏனெனில் இத்தொகுப்பில் ஆண் படைப்பும் அமைந்துள்ளது. பெண்படைப்பும் அமைந்துள்ளது. இவையிரண்டிற்கும் ஒரே பின்புலம். ஒரே கொள்கை. ஒரே எல்லை என்ற பல ஒற்றுமைக் கூறுகள் கிடைத்திருப்பது ஆண்மொழியையும் பெண் மொழியையும் உற்று நோக்கி ஆராய உதவுகிறது.

காக்கைப் பாடினியின் பெண்மொழிக் கூற்றிற்கு முதலில் சான்று காண்போம்.

''இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்தவளங்கெழு குடைச் சூலடங்கிய கொள்கைஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசைஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும்இரவலர் புண்கண் அஞ்சும்'' (காக்கைப் பாடினி 2ம் பத்து ஏழாம் பாடல் வரிகள் 10-15)இப்பாடலடிகளில் கவனிக்கத் தக்கவை

இருகூறுகள்.

1. மகளிர் 2. வளங்கெழு குடைச்சூல்மகளிர் இளமையும் துணையாகும் தன்மையும் உடைய புதல்வரைப் பெற்று நல்வளம் பயந்தவர்கள். ஆன்ற அறிவினர். நல்ல புகழினர். ஒள்ளிய நெற்றியை உடையோர். புலவியின் காரணமாக கண்கள் கோபத்தை வெளிப்படுத்தும். இக்கருத்துகளில் புதல்வர் யாருக்கு நல்வளம் பயக்க இருக்கிறார்கள்? என்ற கருத்து சிந்திக்கத் தக்கது.

''கணவன் உவப்பப் புதல்வர் பயந்து'' (மதுரைக் காஞ்சி 600) என்பது மாங்குடி மருதனாரின் கூற்று. கணவன் மகிழ்வு கொள்வதற்காக மகனைப் பெற்றாள் என்பது ஆணின் கூற்று. தனக்குத் துணையாகும் தன்மை உடைய மகனைப் பெற்றவள் என்பது பெண்மொழி. ஆண்மொழிக்கும் பெண் மொழிக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு இதுதான். பெண் தன் சொற்களுக்குள் அன்பை வைக்கிறாள். ஆண் தன் சொற்களுக்குள் காமத்தை வைக்கிறான். கணவனின் உவப்ப எதற்காக-? என்ற சிந்தனையை மேம்படுத்திப் பார்த்தால் இதன் உண்மை புரியும்.

வளங்கெழு குடைச் சூல் இதற்கு உரையாசிரியர்கள் தருகிற விளக்கம் ''வளமை பொருந்திய சிலம்பையும், அடக்ககத்தால் உயர்ந்த ஒழுக்கத்தையும் உடைய'' ( ஒளவை துரைசாமிப்பிள்ளை உரை) என்பதாகும். வளங்கெழு கடைச் சூல் என்ற தொடரை ஏன் சிலம்பிற்குக் காட்டவேண்டும். உள்புறம் துளை வருமாறு கடையப் பட்ட சிலம்பை அணிந்த பெண் என்ற இந்த இந்த உரைக்குறிப்பு சிலம்பு கழி நோன்பை எல்லாம் கேள்விக்கு உள்ளாக்கி விடும்.

இதற்கு நேர் பொருளை உரையாசிரியர் தந்திருக்கலாம்.

அதாவது வளமை மிகுந்த உள்புறம் குடைவு பெற்ற கருப்பையை உடைய- அதன்வழியாக வளமை மிக்க மகனைப் பெற்றுத் தந்த மகளிர் என்ற பொருளில் பெண் படைத்துள்ளாள். இதனை உரையிட்ட ஆண்உலகம் செய்த மாற்றம் சிலம்பு என்பது.

பெண்ணின் வளமை கருப்பை கொண்டிருப்பது. அதனுள் மகவைத் தாங்குவது. அந்த மகவனுபவத்தை அவள் அவள் சொற்களில்தான் கூறமுடியும் என்பதறகு  மேற்காண் வரிகள் சான்று.இவளின் துனித்த கண் என்பது இதே பத்தின் இரண்டாம் பாடலில் ஆடல் மகளிர்பால் ஈடுபட்ட ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை அவனின் மனைவி ஊடல் கொண்டமையால் கூறப்பட்டதாகும். அந்த கண்களை விட இரவலர் நோயுடைய கண்ணிற்கு இவன் அஞ்சுவான். பெண் தனக்குரிய இடத்தை முன் கண்ணில் பெற்றாள். எனவே பின்கண் இயல்பாய் எவ்விதப் புனைவும் தேவையாகாமல் வந்தது.

இவ்வாறு வரிக்கு வரி பெண் பெண்மொழியில் பேசிக் கொண்டே இருக்கிறாள். அதை அக்கண் நோக்கினால் அன்றி கிட்டாது.ஆண் சொல்லிற்கும் பெண் சொல்லிற்கும் உள்ள ஒரு சிறு வேறுபாட்டை இப்பகுதி கொண்டே விளக்கலாம்.விறலியை அழைக்க வேண்டும். அவளைப் பரிசு பெற ஆற்றுப் படுத்த வேண்டும். அவ்வகையில் காக்கைப் பாடினி '' ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் '' என்றழைக்கிறார்( 6ம் பத்து, எட்டாம் பாடல், அடி 1)

குமட்டூர் கண்ணனார் அழைக்கும் வகை பின்வருமாறு ''உண்மின் கள்ளே, அடுமின் சோறே, எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே, வருநர்க்கு வரையாது பொலங்கலந் தௌ¤ர்ப்ப இருள் வணரொலிவரும் புரியவிழைம்பால் ஏந்துகோட் அல்குல் முகிழ்நகை மடவரல் கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே'' (2ம் பத்து எட்டாம் பாடல் 1-6)

விறலியின் இயல்பு ஆடுதல். எனவே அவளை ஆடுக விறலியர் என்று இயல்பாய் எவ்வித அதிகார தோரணையும் இல்லாமல் அழைக்கிறார் காக்கைப் பாடினி. ஆடும் அவளை தன் வீட்டு ஏவல்காரியாய்ப் பார்க்கிறது குமட்டூர் கண்ணனார் பாடல். சமையல் காரியாய் சமைத்துப் போட வைக்கிறது.


வளங்கெழு குடைச் சூல் இதற்கு உரையாசிரியர்கள் தருகிற விளக்கம் ''வளமை பொருந்திய சிலம்பையும், அடக்ககத்தால் உயர்ந்த ஒழுக்கத்தையும் உடைய'' ( ஒளவை துரைசாமிப்பிள்ளை உரை) என்பதாகும். வளங்கெழு கடைச் சூல் என்ற தொடரை ஏன் சிலம்பிற்குக் காட்டவேண்டும்.

உள்புறம் துளை வருமாறு கடையப் பட்ட சிலம்பை அணிந்த பெண் என்ற இந்த இந்த உரைக்குறிப்பு சிலம்பு கழி நோன்பை எல்லாம் கேள்விக்கு உள்ளாக்கி விடும். இதற்கு நேர் பொருளை உரையாசிரியர் தந்திருக்கலாம். அதாவது வளமை மிகுந்த உள்புறம் குடைவு பெற்ற கருப்பையை உடைய- அதன்வழியாக வளமை மிக்க மகனைப் பெற்றுத் தந்த மகளிர் என்ற பொருளில் பெண் படைத்துள்ளாள்.

இதனை உரையிட்ட ஆண்உலகம் செய்த மாற்றம் சிலம்பு என்பது. பெண்ணின் வளமை கருப்பை கொண்டிருப்பது. அதனுள் மகவைத் தாங்குவது. அந்த மகவனுபவத்தை அவள் அவள் சொற்களில்தான் கூறமுடியும் என்பதற்க மேற்காண் வரிகள் சான்று.இவளின் துனித்த கண் என்பது இதே பத்தின் இரண்டாம் பாடலில் ஆடல் மகளிர்பால் ஈடுபட்ட ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை அவனின் மனைவி ஊடல் கொண்டமையால் கூறப்பட்டதாகும். அந்த கண்களை விட இரவலர் நோயுடைய கண்ணிற்கு இவன் அஞ்சுவான். பெண் தனக்குரிய இடத்தை முன் கண்ணில் பெற்றாள். எனவே பின்கண் இயல்பாய் எவ்விதப் புனைவும் தேவையாகாமல் வந்தது.

இவ்வாறு வரிக்கு வரி பெண் பெண்மொழியில் பேசிக் கொண்டே இருக்கிறாள். அதை அக்கண் நோக்கினால் அன்றி கிட்டாது.ஆண் சொல்லிற்கும் பெண் சொல்லிற்கும் உள்ள ஒரு சிறு வேறுபாட்டை இப்பகுதி கொண்டே விளக்கலாம்.

விறலியை அழைக்க வேண்டும். அவளைப் பரிசு பெற ஆற்றுப் படுத்த வேண்டும். அவ்வகையில் காக்கைப் பாடினி '' ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் '' என்றழைக்கிறார்( 6ம் பத்து, எட்டாம் பாடல், அடி 1)

குமட்டூர் கண்ணனார் அழைக்கும் வகை பின்வருமாறு ''உண்மின் கள்ளே, அடுமின் சோறே, எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே, வருநர்க்கு வரையாது பொலங்கலந் தௌ¤ர்ப்ப இருள் வணரொலிவரும் புரியவிழைம்பால் ஏந்துகோட் அல்குல் முகிழ்நகை மடவரல் கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே'' (2ம் பத்து எட்டாம் பாடல் 1-6)

விறலியின் இயல்பு ஆடுதல். எனவே அவளை ஆடுக விறலியர் என்று இயல்பாய் எவ்வித அதிகார தோரணையும் இல்லாமல் அழைக்கிறார் காக்கைப் பாடினி. ஆடும் அவளை தன் வீட்டு ஏவல்காரியாய்ப் பார்க்கிறது குமட்டூர் கண்ணனார் பாடல். சமையல் காரியாய் சமைத்துப் போட வைக்கிறது.

காக்கைப் பாடினியைப் பொறுத்தவரையில் அவளும் விறலி அல்லது பாடினி என்ற வகைப் பெண்களுடன் ஒருவள் தான்.

குமட்டூராருக்கு அவள் ஒரு கற்பனைப் பாத்திரம். அவள் உணர்வோடு உயிரோடு அவர் ஒன்றுதல் இயலாது. எனவே அக் கற்பனைப் பாத்திரத்தை எதையும் செய்யக் கூறலாம்.

மாடு கன்று மேய்க்கச் சொல்லலாம். வீடு கூட்டச் சொல்லலாம். இவ்வகையில் சிந்தித்துக் கொண்டே போக நல்லகளம் பதிற்றுப்பத்து. இக்கட்டுரை வழி சில மட்டுமே காட்டப் பெற்றன. பல உள்ளன.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

PALANTHAMILAGAM - SOME DETAILS IN BLOGS

நான் இன்று வலைத் தளங்களில் உலா வந்த போது ஒரு அருமையான தளத்தை பார்த்து அதிலுள்ள கருத்துக்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அருமையான தகவல்கள்.  நான் தேடிக் கொண்டிருந்த தகவல்கள்.  தமிழ் பற்றியும் தமிழகம் பற்றியும் தகவல் இருந்தால் உங்களுக்குச் சொல்லத் தானே இந்தத் தளம்.  தளத்தின் PEYAR
http://thamizmandram.blogspot.com/
நன்றி மறப்பது நன்றன்று என்பதால் முதலிலேயே எந்த இடத்தில இருந்து இந்த தகவல் பெறப்பட்டது என்பதை சொல்லி இருக்கிறார் இதைப் பதிந்தவர்.  பதிந்தவர் பெயருடன் எல்லோருக்கும் நன்றி கூறி இந்த தகவலை உங்களுக்குத் தருகிறேன்.  பல பேருக்கு இலமுரியக் கண்டம் என்றால் என்ன என்று தெரியாது.  அல்லது கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.   இந்தக் கட்டுரை மிக அழகாக விளக்குகிறது இலமுரியாக் கண்டதைப் பற்றி.

நன்றி: http://www.tamileluthu.org/nolaivayil/lemuria/

இலமுரியா கண்டம்

ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள்.

பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்.

பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தூவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.

ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.

குமரிமாந்தரின் மொழியற்ற நிலை
“சைகை மொழி” – Sign Language.

குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்சியுமின்றி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or Sign Language) இதை ஊமையர் மொழி என்றே கூறலாம்.

இயற்கை மொழி தோரா. கி.மு.1,00,000 – 5,00,000
எழுத்தும், உச்சரிப்பும் சொற் பொருத்தமும் இல்லாமல் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி (Natural Language) இயற்கை மொழியாம், இம்மொழியை “முழைத்தல் மொழி” (Gesture Language – or Sign Language) என்கிறோம். இம்மொழியின் ஒலிகள் 8 வகைப்படும். அவை

1. உணர்ச்சியொலிகள் (Emotional Sounds)
இன்ப துன்ப உணர்வை வெளியிடும் ஒலிகள்.

2. விளியொலிகள் (Vocative Sounds) பிறரை
விளித்தல், அழைத்தல், கூப்பிடிதல் போன்றவைகள்.

3. ஒப்பொலிகள் (Imitative Sounds)
இரு திணைப் பொருளுரைக்கும் ஒலிகள்.

4. குறிப்பொலிகள் (Symbolic Sounds) வழக்கப்படி
கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒலிகள்.

5. வாய்ச் செய்கையொலிகள்
வாயினாற் செய்யும் செய்கைகளும் செயல்களும்.

6. குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds)
குழந்தைப் பருவத்தினருக்குப் பொருந்தும் ஒலிகள்.

7. சுட்டொலிகள் (Decitive Sounds)
சுட்டிக் காட்டும் ஒலிகள் சுட்டொலிகள், மற்றும்.

8. வினாவொலிகள் என்பவைகளும் உண்டு,
அவை ஐயம், சந்தேகம் மற்றும் வினாக்களை
எழுப்பும் ஒலிகள் எனப்படும்.

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000
மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். இதைச் செயற்கை மொழி (Artificial Language or Artificial Speech) என்கிறோம். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!
குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.

நான்கு பெருங் கடல் கோள்கள்

1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.

சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது.

தொல்காப்பியம்
பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.

மூன்று தமிழ் : தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.

1. பழந்தமிழ்
2. இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்

1. பழந்தமிழ் (Ancient Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ்

Early ancient Tamil (or) Proto Ancient Tamil

ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil

இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil

2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil

ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil

இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil

3. தற்காலத் தமிழ் (Modern Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil

ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil

முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்
Early ancient Tamil (or) Proto Ancient Tamil
திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.

திராவிட மொழிக் குடும்பம்
மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம், கன்னடம்.
2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.
3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.

தமிழ்மொழியின் பெரும்புகழ்
திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.

இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.

தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு
உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது. அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன. அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது. உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது.

வரலாற்றுச் சான்றுகள்
வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று. மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு. ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும்.

தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள்
மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது மனிதன் என்று தோன்றினான்? உயிரின வளர்ச்சிகள், மொழிகளின் இயற்கைத் தோற்றம், அவற்றின் வளர்ச்சிகள், போன்ற பலதலைப்புகளில் சிந்தனையைச் செலுத்தவும், ஆய்வினைக் கொள்ளவும், முதல் முதலில் தோன்றியது “டார்வினின் பரிணாமக் கொள்கையே” ஆகும். தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.

ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள்
ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே! இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர். தமிழ்மொழியின் தொன்மையையும், தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பின்வரும் பகுதிகளில் நன்கு அறிவோம்.

சார்லஸ் டார்வின்
இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மேதை திரு. சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினத்தோற்றம்” வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் குரங்கையொத்த உருவைக் கொண்ட “மாந்தன் (Lemuria)” போன்ற உயிரினத் தோற்றங்களை அறிகின்றோம். மேலும் “மனிதனின் பாரம்பரிய வளர்ச்சி” என்னும் நூலின் வாயிலாக குமரிமாந்தனையும், மனித இன பரிணாம வளர்ச்சியையும் உணரமுடிகிறது.

Friday, October 8, 2010

CHENNAI LIBRARY.COM

உலகத்தின் எந்த பகுதியில் தமிழர் வசித்தாலும் அவர்கள் எழிதில் தமிழ் இலக்கியம், புதினங்கள், பாடல்கள் போன்றவற்றை படித்து இரசிக்க கதைகளைப் பார்க்க அருமையான தளங்கள் பல உள்ளன.  அவற்றில் சில chennailibrary.com., tamilvu.org,.  இலக்கியம் வேண்டாம் வெறும் சைவ சித்தாந்தம் வேண்டும் - பன்னிருதிருமுறை, திருவிளையடர் புராணம், கந்த புராணம், போன்றவை வேண்டுமா saivam.com இப்படி ஏராளமான தளங்கள் உள்ளன.  இன்று chennailibrary.com  சென்று கம்ப ராமாயணம், பாரதிதாசன் பாடல்கள், நா. பார்த்தசாரதி அவர்களின் கதைகள் ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  படிப்பதற்கு மிக வசதியாக இருந்தது.  நான் மதுரையைச் சேர்ந்தவன் என்பதால் இராணி மங்கம்மாள் கதையைப் படித்தேன்.  மிக அழகான தமிழ் நடை.
மதுரைவாசி என்பதால் திருவிழாவை இரசித்தேன்.  மதுரையில் உள்ள பல பேருக்குத் தெரியாத விஷயம்.  தற்போது உள்ள காந்தி மியுசியம் முன்னால் இராணி மங்கம்மாளின் அரண்மனையாக இருந்தது.  தமுக்கம் திடல் என்றால் பயிற்சித் திடல் என்பதும் பல பேருக்குத் தெரியாது.  இதெல்லாம் கதையில் வருகிறது.  திருவிழா நடைபெறும் போக்கை கவனித்தால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எப்படி நதி - திருவிழாக் கொண்டாட்டம் இருக்குமோ அதை அப்படியே மனக்கண் முன் கொண்டுவந்து விட்டது.  இப்படிப் படித்துச் சுவைக்க ஏராளமான புதினங்கள், சிறுகதைகள் உள்ளன.  தமிழை ஒதுக்கி ஆங்கிலத்திற்கு முதலிடம் கொடுக்கும் ஊடகங்களைத் தவிர்த்து இப்படி வலைஉலா வரலாமே.  நன்றி.

Friday, October 1, 2010

TAMIL - TAMILAR - BLOGS

வளமை என்னும் ஒரு அருமையான தளத்தைப் பற்றி ஏற்கனவே நான் உங்களிடம் என் கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.  தமிழ் - தமிழர் - தமிழ் சொற்கள் - சொல் ஆராய்ச்சி - இப்படி தொடர்ந்து கொண்டே போகும் இந்த தளத்தின் சாதனை.  நான் இன்று இந்த தளத்தில் உலவிய போது - நாம் தொலைத்த சொற்கள் பற்றி சில தகவல் கிடைத்தது.  நீங்களும் படியுங்கள்.
http://valamai.blogspot.com/
நாள் என்ற சொல்லை காலை, பகல், எற்பாடு என்ற முத்தொகுதியைக் குறிக்கவும், அல் என்ற சொல்லை மாலை, யாமம், விடியல் என்ற முத்தொகுதியைக் குறிக்கவும் பயன்படுத்துகிறோம். அல்லை இரவு என்று தான் இந்தக் காலத்தில் குறிக்கிறோம்.
ஒரு நாளுக்கு ஆகும் மொத்த நேரத்தை 6 சிறு பொழுதுகளாகவும் ஒவ்வொரு சிறுபொழுதுக்கும் 10 நாழிகைகளாகவும் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னால் தமிழர்கள் பகுத்திருக்கிறார்கள். காலை, பகல், எற்பாடு, மாலை, யாமம், விடியல் (=வைகறை) என்ற இந்த ஆறு சிறு பொழுதுகளைச் சொல்லுவார்கள். ஒளி அடங்கும் ஏற்பாடு, இருள் தொடங்கும் மாலை ஆகியவை சந்திக்கும் நேரமும், இருள் குறையும் வைகறை, ஒளி தோன்றும் காலை ஆகியவை சந்திக்கும் நேரமும் மாந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் நம்மை ஈர்க்கின்றன. எல் எனும் சூரியன் பட்டுக்கொண்டே வரும் நேரம் எற்பாடு. அந்த எற்பாட்டிற்கு அப்புறம் உள்ள 10 நாழிகைகளில் சூரியன் முற்றிலும் வலுவிழந்து தொய்ந்து போய் விடுகிறான். இருள் தொடங்குகிறது. அந்த நிலையில் இருளும் ஒளியும் முயங்கிக் கிடக்கும் 10 நாழிகைகள் மயங்குகின்ற நேரமாய், மயலுகின்ற நேரமாய், மயலையாய், மாலையாய் ஆகிப் போகிறது. பகலா, இரவா என்று மலங்குகின்ற நேரம் தான் மாலை. மலங்குவது என்பதும் மயங்குதலே. மல்>மர்>மருட்டு என்ற சொல்லும் இந்த வேரில் இருந்து எழுந்ததே.
நம்முடைய மாலையின் இன்னொரு பெயர் தான் தொய்யம். சூரியன் குறைப்பட்டுப் போன நேரத்தை தொய்யம்>தோயம்>தோஷம் என்றே வடமொழி அழைக்கிறது
நீங்களும் இந்த தளத்தில் சுற்றிவந்து தமிழ்த்தேனைச்
சுவையுங்களேன்.

Thursday, September 30, 2010

http://valavu.blogspot.com - fine tamil blog - regarding


இன்று நான் வளவு எனறு ஒரு வலைத் தளத்தில் பொழுது பூராவும் சுற்றினேன்.  மிக அருமையான பதிவுகள்.  சவுக்கடி தரும் சாட்டை போல கட்டுரைகள்.  கலங்கரை விளக்கம் போல தமிழ்க் கடல் எங்கும் ஒலி பாய்ச்சியது.  பல தகவல்கள்.  சொல் ஆராய்ச்சி - எண் ஆராய்ச்சி - இலக்கிய ஆராய்ச்சி - வானியல் ஆராய்ச்சி.  அப்பப்பா பன்முகம் கொண்ட வலைத் தளம்.  மொழியின் பால் அக்கறை கொண்டுள்ள அருமையான தளம்.  பல சொற்களுக்கு உரிய தமிழ் சொற்களை அறிந்து கொண்டேன்.  தமிழே தெரியாமல் பிற மொழி சொற்களை பயன் படுத்தியதற்கு வெட்கப்பட்டேன்.   வேதனைப்பட்டேன்.  "கனி இருப்பக் காய்" தேர்வு செய்தது போல நாட்களை வீண் அடித்து உள்ளேன்.  அவர் கேட்கும் சில கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன்.  பதில் சொல்லுங்கள்.  உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவர் தமிழே சிந்தித்து உள்ளார்.  தமிழோடு ஒப்பிட்டு உள்ளார்.  தமிழ் தான் எல்லாம் எனறு சாதிக்க அவரால் முடிகிறது.  தமிழன் எனறு சொல்லடா தாளை நிமிர்ந்து நில்லடா என்பது அவரது தாரக மந்திரமாக உள்ளது.  அதே சமயம் பிற மொழிகளை வெறுக்கவும் இல்லை.  அதனால் தான் ஆணித்தரமாக கருத்துகளை ஆதாரங்களுடன் பதிவு செய்கிறார்.  நாமும் படித்து ஒரு சிறு பங்காவது அவர் போல வர வேண்டும்.
உங்கள் பேச்சில் தமிழ் மிக மிகக் குறைந்து இருந்தால் அது எதனால் ஏற்படுகிறது? தமிழும், தமிழன் என்ற அடையாளமும் வேண்டாம் என்று முடிவெடுத்து விலக்குகிறீர்களா? அல்லது சோம்பலாலும், கவனக் குறைவாலும், ஆங்கிலம் பழகினால் குமுகாயத்தில் ஒரு மேலிடம் கிடைக்கும் என்ற உந்துதலாலும் தமிழை விலக்குகிறீர்களா? தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது தமிழ நாகரிகத்தின் கருவூலம் என்பதை மறுத்து, அது வெறும் கருத்துப் பரிமாற்ற மொழி, இனி வரும் நாட்களில் ஆங்கிலமே போதும் என்று எண்ணுகிறீர்களா?

நீங்கள் பேசும் ஆங்கிலத்திற்குள் உங்களை அறியாமல் தமிழ் ஊடுறுவுகிறதா? அப்படி ஊடுறுவினால் அதை ஒரு நாகரிகம் இல்லாத பட்டிக் காட்டுத் தனம் என்று எண்ணிக் கொஞ்சம் வெட்கப் பட்டுக் கொண்டு, அதைத் தவிர்க்க முயன்றிருக்கிறீர்களா? உங்கள் ஆங்கில வன்மை கூடுவதற்காகப் பல்வேறு பயிற்சிகள் செய்ய முற்பட்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ஆங்கிலம் - ஆங்கிலம் அகரமுதலியை வைத்திருக்கிறீர்களா? உங்களுக்குத் தெரியாத ஆங்கிலச் சொற்களைப் பயிலும் போது அவற்றின் பொருள் அறிய வேண்டிச் சட்டென்று அகர முதலியைத் தேடுகிறீர்களா?

சுற்றம், நட்பு போன்ற இடங்களில் நீங்கள் தமிழ் பேசத் தவித்திருக்கிறீர்களா? அலுவல் தவிர்த்து மற்றோரோடு நீங்கள் பேசும் உரையாடல்களில் எத்தனை விழுக்காடு தமிழில் இருக்கும்? அடிப்படை வாழ்க்கைச் செய்திகளில் உங்களால் தமிழில் உரையாட முடிகிறதா? தமிழ் பேசும் போது ஆங்கிலம் ஊடுறுவினால் அதைப் பட்டிக் காட்டுத் தனம் என்று எண்ணாமல், நாகரிகம் என்று எண்ணுகிறீர்களா? அந்த ஊடுறுவலைத் தவிர்க்க முடியும் என்று அறிவீர்களோ? உங்கள் வீட்டில் தமிழ்-தமிழ் அகரமுதலி இருக்கிறதா? தமிழ்- ஆங்கிலம் அகரமுதலி இருக்கிறதா? உங்களுக்குத் தெரியாத தமிழ்ச் சொற்களைப் பயிலும் போது உடனே தமிழ்-தமிழ் அகரமுதலியைத் தேடுகிறீர்களா?

எந்த ஒரு மொழியிலும் கிட்டத்தட்ட 85 விழுக்காடு வினையல்லாத பெயர், இடை மற்றும் உரிச் சொற்கள் என்றும் 15 விழுக்காடுகளே வினைச்சொற்கள் என்றும் உங்களுக்குத் தெரியுமா? சொல்வளத்தைக் கூட்டுவது என்பது பெயர்ச்சொற்களை மேலும் மேலும் அறிந்துகொள்ளுவதே என்று கேட்டிருக்கிறீர்களா? நம் ஊர்ப்பக்கம் நாம் கற்றுக் கொண்டவை கூடப் புழங்கிக் கொண்டே இருக்கவில்லை என்றால் மறந்துவிடும் என்று அறிவீர்களா? தமிழ் வட்டாரத்திற்கு வட்டாரம் ஓரளவு மாறிப் புழங்குகிறது என்று தெரியுமா? இந்தத் தமிழ் நிலைத்திருக்க நாம் என்னெவெல்லாம் செய்கிறோம் என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் என்பது நாம் பழகும் ஒரு மொழி என்பதோடு மட்டுமல்லாமல், மேலும் சில கடமைகள் நமக்கு உண்டு என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நமக்கு என்ன தருகிறது? தமிழுக்கு நாம் என்ன தருகிறோம் என்ற இருபோக்கு நடைமுறையைக் கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம்

மொழி என்பது ஊடகம் மட்டுமல்ல; அது ஒரு பின்புலமும் கூட. இந்தப் பின் புலம் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. அது நம் சிந்தனையை ஒரு விதக் கட்டிற்குக் கொண்டுவருகிறது. நாம் மொழியால் கட்டுப் படுகிறோம். மாந்தரும் கூட தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பத்தானே இருக்க முடியும்? பிறக்கும் போது இருக்கும் பின் புலத்தின் தாக்கம் (அது பெற்றோர் வழியாகவோ, மற்றோர் வழியாகவோ) ஏற்பட்டபின், தமிழை ஒதுக்கி ஒரு தீவு போல வேறொரு மொழியின் பின்புலத்தில் வளர முடியுமோ?

தமிழ் கற்பது என்பது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி. உங்களோடு இந்தப் பழக்கம் நின்று போகவா நீங்கள் இதைக் கற்றுக் கொண்டீர்கள்? இல்லையே? வாழையடி வாழையாய் இந்த மொழி பேசும் பழக்கம் தொடர வேண்டும் என்றுதானே உங்களுக்கு மற்றவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்? அப்படியானால், இந்தத் தொடர்ச்சியைக் காப்பாற்ற யாருக்கெல்லாம் நீங்கள் தமிழ் பேசக் கற்றுக் கொடுத்தீர்கள்? குழந்தையாய் இருந்த போது கற்றுக் கொண்ட "நிலா!நிலா! ஓடி வா" வையும், "கைவீசம்மா, கைவீசு" வையும் இன்னொரு தமிழ்க் குழந்தைக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்களா? வாலறுந்த நரி, சுட்ட பழம் - சுடாத பழம் போன்ற கதைகளை இன்னொருவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா? ஆத்திச் சூடி, திருக்குறள், நாலடியார் போன்றவற்றில் இருந்து ஒரு சிலவாவது மற்றவர்க்குச் சொல்ல முடியுமா? இந்தக் கால பாரதி, பாரதிதாசன் ஏதாவது படித்திருக்கிறீர்களா? கொஞ்சம் மு.., கொஞ்சம் திரு.வி.. படித்திருக்கிறீர்களா? ஓரளவாவது புதுமைப் பித்தன், மௌனி, லா..ரா, செயகாந்தன் படித்திருக்கிறீர்களா? பல்வேறு காலத் தமிழ்ப் பாட்டுக்கள், மற்றும் உரைநடைகளைப் படித்திருக்கிறீர்களா?

ஏரணம் (logic) என்பது சிந்தனை வளர்ச்சியில் காரண காரியம் பார்க்கும் முறை; இதை வேறு ஒரு மொழியின் மூலம் கற்றுக் கொள்ளுவது ஓரளவு முடியும் என்றாலும் தாய்மொழியில் கற்பது எளிது என்று அறிவீர்களா?

அதாவது தமிழின் பண்பாட்டு வருதிக்கு நாம் என்ன செய்கிறோம்? நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு என்ன தருகிறோம்? இருக்கின்ற சொத்தோடு கூட, என்ன சேர்த்து வைத்துப் போகிறோம்? இன்றைக்குத் தமிழ் என்பது பழம் பெருமை பேசுதற்கும், பழைய இலக்கியம், இலக்கணம், அண்மைக்காலக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கொஞ்சம் அரசியல், ஏராளம் திரைப்படம் பற்றி அறிய மட்டுமே பயன்பட்டு வருவது ஒரு பெருங்குறை என்று அறிவீர்களா? நம்மை அறியாமலேயே அலுவல் என்பதற்கு ஆங்கிலமும், நுட்பவியல் என்பதற்கு ஆங்கிலமும், மற்றவற்றிற்குத் தமிழும் என ஆக்கிவைத்திருப்பது எவ்வளவு சரி? புதுப் புது அறிவுகளைக் கலைகளைத் தமிழில் சொல்லவில்லை என்றால் தமிழ் குறைபட்டுப் போகாதா? அப்புறம் தமிழில் என்ன இருக்கிறது என்ற நம் பிறங்கடைகள் கேட்க மாட்டார்களா? நாம் சொல்லிப் பார்த்து அதன் மூலம் மொழி வளம் கூட்டவில்லை என்றால் நம் மொழி பயனில்லாத ஒன்று என்று இன்னும் ஒரு தலை முறையில் அழிந்து போகாதா? நாம் தமிழுக்கு என்ன செய்தோம்? நமக்குத் தெரிந்த செய்திகளை, அறிவைத் தமிழில் சொல்லிப் பார்க்கிறோமா? ஆங்கிலம் தெரியாத நம் மக்களுக்குப் புரிய வைக்கிறோமா? எல்லாவற்றிற்கும் ஆங்கிலமே புழங்கி நம் எதிர்காலத்தை நாமே போக்கிக் கொள்ளுகிறோமே, அது எதனால்?
இந்தக் கட்டுரையில் கேள்விகளை மட்டுமே எழுப்பிக் கொண்டு இருக்கிறேன். அதற்கான விடைகளை நீங்கள் தேடவேண்டும் என்ற எண்ணம் கருதியே கேள்விகளை எழுப்புகிறேன். எண்ணிப் பாருங்கள்.

தமிழுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? கணி வழிக் கல்வி, கணிப் பயன்பாடு என எத்தனையோ படிக்கப் போகிறீர்கள். இந்தக் கணியுகத்திலும் தமிழ் தலை நிமிர்ந்து நிற்க முடியும், நீங்கள் ஒத்துழைத்தால். செய்வீர்களா?

தமிழ் பாடமொழியாவது குதிரைக் கொம்பாகி, மொழிப்பாடம் என்பது கூடக் குறைந்து போனது. தமிழ் படிக்காமலே ஒரு தமிழர்/தமிழ்நாட்டில் குறைந்தது 10 ஆண்டுகளாவது இருந்தவர் பள்ளிப் படிப்பை முடிக்க முடியும் என்ற நிலை வந்து சேர்ந்தது. இப்பொழுது மழலைப் பருவத்திலும் கூடத் தமிழ் படிக்காத ஓர் உயர்ந்த முன்னேற்றத்திற்கு(?)ப் போய்க் கொண்டிருக்கிறோம்.

அடுத்துள்ள புதுச்சேரி மாநிலம் தங்கள் மாநிலத்தில் எந்தப் பள்ளியில் படித்தாலும் அவர்கள் தமிழர்களாக இருப்பின்/ குறிப்பிட்ட காலம் தமிழ் பேசும் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களாக இருப்பின், தமிழ்மொழிப் பாடத்தை எட்டாவது வரை கட்டாயமாகப் படித்தே தீரவேண்டும் என்று சட்டம் இயற்றி இருக்கிறார்கள்.
அவர்கள் துணிவுள்ளவர்கள்; பாராட்டத்தான் வேண்டும். மயிலே மயிலே இறகு போடு என்றால் அது இறகு போடாது என்பது தமிழ்ப் பழமொழி. மக்களாட்சி என்பது பொறுப்பற்ற, எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற ஆட்சி அல்ல. அரசின் ஆட்சி என்பது ஒருவகையில் அதிரடிச் செயல் தான்.

தொலைக்காட்சியில் வரும் ஓடைகளை மாற்றிக் கொண்டு இருந்தேன். கையில் தூரக்கட்டு இருந்தால் ஓர் ஓடையில் நிலைக்காமல் இப்படி மாற்றிக் கொண்டே இருக்கச் சொல்லும்;

ஒரு மோகன்லால் திரைப்படம். அழுத்தம் திருத்தமான ஒலிப்போடு மோகன்லால் மலையாளம் பேசும் பாணி என்னை எப்பொழுதுமே கவர்ந்தது உண்டு.
ஒரு இடத்தில் "ஞங்களைத் தோல்பிச்சவனை ஞான் தோல்பிக்கணும்" என்ற வாசகம் கேட்டு எங்கோ நெஞ்சுள் மணி ஒலிக்கத் தொடங்கியது; இப்படி ஒரு வினை தமிழில் ஏன் இல்லாது போனது? எப்போது தொலைத்தோம்? மனம் வேறொரு பக்கம் யோசிக்கத் தொடங்கியது. நாம் தொலைத்ததை மலையாளமாவது காப்பாற்றி வைத்திருக்கிறதே என்று நிறைவு கொண்டேன்.
நான் தோற்றேன்; தோற்கிறேன்; தோற்பேன் இப்படித் தமிழில் உண்டு. ஆனால் பிறவினை என்று வரும்போது நம்மை அறியாமல் பெயர்ச் சொல்லோடு துணை வினை போட்டு ஏன் சுற்றி வளைக்கிறோம்? அவனை நான் தோற்கச் செய்தேன் என்று சுற்றி வளைத்து ஏன் சொல்கிறோம்? இல்லாவிட்டால் தோற்க வைத்தேன் என்று சொல்லுகிறோம் இல்லையா? மலையாளத்தில் உள்ளது போல் தோற்பித்தேன் என்று எளிதாகச் சொல்லலாமே? என்ன ஆயிற்று நமக்கு? பகரம் வேண்டாம் என்றால் வகரம் இட்டுச் சொல்லலாமே! தோல்வித்தேன் என்று கூட ஏன் சொல்ல மாட்டேன் என்கிறோம்? செய்தேன்/செய்வித்தேன், படித்தேன்/ படிப்பித்தேன் என்று வரும் போது தோற்றேன்/தோற்பித்தேன் என்பது ஏன் வழக்கில்லாமற் போயிற்று?

தமிழுக்கு மிக நெருங்கியது மலையாளம், அடுத்தது கன்னடம். கொஞ்சம் தள்ளித் தெலுங்கு. இந்த மூன்று மொழிகளில் இருந்து, தமிழ் வளருவதற்காக, நாம் மீட்கவேண்டிய மொழி மரபுகள், புழக்கங்கள் மிகப் பல என்றே தோன்றுகிறது.
தமிழில் இருந்து கிரந்தம் பிறந்ததனால் கிரந்த எழுத்தைத் தமிழ் எழுதப் பயன் படுத்துங்கள் என்று சொல்லாதீர்கள் என்று சொல்லுகிறோம். இது தவறா? அப்படி எழுதப் புகுந்து தான் மலையாளம் பிறந்தது. மலையாள எழுத்திற்கும், கிரந்த எழுத்திற்கும் மிக மிகக் குறுகிய வேறுபாடே உண்டு. மலையாளம் தமிழில் இருந்து பிரிந்து நிலைத்துப் போனதற்கு கிரந்த எழுத்தில் நம்பூதிரிகள் எழுதத் தொடங்கியதே பெருங் காரணம்

இதே போல ஆங்கிலம் கலந்த சொல்லை பயன்படுத்தி தமிழைக் கொள்ளக் கூடாது என்றும் பதிவு செய்து உள்ளார்.  ஒரு விளம்பரத்தை அவர் உதாரணமாகக் காட்டி உள்ளார்.  ஒரு வார இதழில் வந்தது.
அண்மையில் (11/11/09) அன்று வெளியான அறிவிப்பு.

"
ஹாய் வாசகர்களே! 64-65ம் பக்கங்களில் "ஜோக் ஆர்மி" ஓவியத்தில் எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் மொபைலில் AVJ என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதை எண்களில் மட்டும் டைப் செய்யுங்கள். தொடர்ந்து அந்த ஜோக்கைப் பற்றி ஒரு வரி நச் கமென்ட் சேர்த்து 562636 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள். சரியான விடை ப்ளஸ் பளிச் கமென்டுடன் வந்து விழும் 10 எஸ்எம்எஸ் களை அனுப்பியவர்களுக்குத் தலா 1,000 ரூபாய் பரிசு. 8.1.109அன்று இரவு 8 மணிக்குள் உங்கள் எஸ்எம்எஸ்கள் டெலிவர் ஆகும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இப்போ 64-65ம் பக்கங்களில் ஜோக் ஆர்மிக்கு ணிவகுப்போமா? ஜோக்குகளில் எண்ணிக்கை குறித்து ஓவியரின் தீர்ப்பே இறுதியானது! எஸ்எம்எஸ் கட்டணங்களுக்கு உட்பட்டது! கடந்த வார ஜோக் பார்க் போட்டி முடிவுகள் 11ம் பக்கத்தில்! ஆல் நியூ விகடனைப் பற்றிய கருத்துக்களை உங்கள் குரலிலேயே பதிவு செய்ய 044-42890004 எதிர்முனையில் பதில் குரலை எதிர்பாராமல் தாங்கள் கூற விரும்புவதை நீங்களாகவே பதிவு செய்து விடுங்கள்!
இப்படி வருவதை நாம் கண்டிப்பதில்லையே?  அதனால் தான் நம் மொழியைக் கொலை செய்கிறார்கள் பாதகர்கள்.  தாயைத் தண்டிப்பதில் என்ன சுகமோ இவர்களுக்கு?  இவர்கள் பித்ரு பூஜை என்னும் முன்னோர் பூஜை செய்தும் பயன் இல்லை.  பாழ் நரகம் தான் இப்படிப்பட்டவர்களுக்கு.