Thursday, May 26, 2011

கொடுங்கோலன் பிணத்திற்குச் சமமானவன் / நீதிநெறி விளக்கப் பாடல்

முடிப்ப முடித்துப் பின் பூசுவ பூசி
உடுப்ப உடுத்து உண்ப உண்ணா . இடித்து இடித்துக்
கட்டுரை கூறின் செவிகொளா கண்விழியா
நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம்

மேற்கண்ட பாடல் கொடுங்கோலன் குறித்து நீதிநெறி விளக்கத்திலே கூறப்பட்ட அருமையான பாடலாகும்.  கொடுங்கோலன் எப்படி இருப்பான்.
அருமையான மலர்களை அணிந்து - வாசனைத் திரவியங்களைப் பூசி - சிற்ந்த ஆடைகளை அணிந்து கொள்வான்.  அறுசுவை உணவை உண்பான்.  இதுவரைக்கும் இவனைப் பாராட்டலாம்.  வாழ்க்கையை அனுபவிக்கிறான் இந்த அரசன் என்று கருதலாம்.  ஆனால்  தவறுகள் செய்யும் போது அமைச்சர்க்ள் இடித்துக் கூறினால் - சுட்டிக்காட்டினால் - அப்படிப்பட்ட அறிவுரைகளை செவிகொடுத்துக் கேட்க மாட்டான்.    தான் ஆசைப்பட்ட வண்ணம் நடந்து கொள்வான்.  இப்படிப்பட்ட மன்னனை யாருடன் ஒப்பிடலாம்.  புலவர் ஒரு பிணத்திற்குச் சமமானவன் இந்த அரசன் என்று கூறுகிறார்.

கட்டுரை என்றால் அறிவுரை
நெட்டுயிர்ப்பு என்றால் பெருமமூச்சு என்று பொருள்.

No comments:

Post a Comment