Friday, October 8, 2010

CHENNAI LIBRARY.COM

உலகத்தின் எந்த பகுதியில் தமிழர் வசித்தாலும் அவர்கள் எழிதில் தமிழ் இலக்கியம், புதினங்கள், பாடல்கள் போன்றவற்றை படித்து இரசிக்க கதைகளைப் பார்க்க அருமையான தளங்கள் பல உள்ளன.  அவற்றில் சில chennailibrary.com., tamilvu.org,.  இலக்கியம் வேண்டாம் வெறும் சைவ சித்தாந்தம் வேண்டும் - பன்னிருதிருமுறை, திருவிளையடர் புராணம், கந்த புராணம், போன்றவை வேண்டுமா saivam.com இப்படி ஏராளமான தளங்கள் உள்ளன.  இன்று chennailibrary.com  சென்று கம்ப ராமாயணம், பாரதிதாசன் பாடல்கள், நா. பார்த்தசாரதி அவர்களின் கதைகள் ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  படிப்பதற்கு மிக வசதியாக இருந்தது.  நான் மதுரையைச் சேர்ந்தவன் என்பதால் இராணி மங்கம்மாள் கதையைப் படித்தேன்.  மிக அழகான தமிழ் நடை.
மதுரைவாசி என்பதால் திருவிழாவை இரசித்தேன்.  மதுரையில் உள்ள பல பேருக்குத் தெரியாத விஷயம்.  தற்போது உள்ள காந்தி மியுசியம் முன்னால் இராணி மங்கம்மாளின் அரண்மனையாக இருந்தது.  தமுக்கம் திடல் என்றால் பயிற்சித் திடல் என்பதும் பல பேருக்குத் தெரியாது.  இதெல்லாம் கதையில் வருகிறது.  திருவிழா நடைபெறும் போக்கை கவனித்தால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எப்படி நதி - திருவிழாக் கொண்டாட்டம் இருக்குமோ அதை அப்படியே மனக்கண் முன் கொண்டுவந்து விட்டது.  இப்படிப் படித்துச் சுவைக்க ஏராளமான புதினங்கள், சிறுகதைகள் உள்ளன.  தமிழை ஒதுக்கி ஆங்கிலத்திற்கு முதலிடம் கொடுக்கும் ஊடகங்களைத் தவிர்த்து இப்படி வலைஉலா வரலாமே.  நன்றி.

No comments:

Post a Comment