Friday, October 1, 2010

TAMIL - TAMILAR - BLOGS

வளமை என்னும் ஒரு அருமையான தளத்தைப் பற்றி ஏற்கனவே நான் உங்களிடம் என் கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.  தமிழ் - தமிழர் - தமிழ் சொற்கள் - சொல் ஆராய்ச்சி - இப்படி தொடர்ந்து கொண்டே போகும் இந்த தளத்தின் சாதனை.  நான் இன்று இந்த தளத்தில் உலவிய போது - நாம் தொலைத்த சொற்கள் பற்றி சில தகவல் கிடைத்தது.  நீங்களும் படியுங்கள்.
http://valamai.blogspot.com/
நாள் என்ற சொல்லை காலை, பகல், எற்பாடு என்ற முத்தொகுதியைக் குறிக்கவும், அல் என்ற சொல்லை மாலை, யாமம், விடியல் என்ற முத்தொகுதியைக் குறிக்கவும் பயன்படுத்துகிறோம். அல்லை இரவு என்று தான் இந்தக் காலத்தில் குறிக்கிறோம்.
ஒரு நாளுக்கு ஆகும் மொத்த நேரத்தை 6 சிறு பொழுதுகளாகவும் ஒவ்வொரு சிறுபொழுதுக்கும் 10 நாழிகைகளாகவும் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னால் தமிழர்கள் பகுத்திருக்கிறார்கள். காலை, பகல், எற்பாடு, மாலை, யாமம், விடியல் (=வைகறை) என்ற இந்த ஆறு சிறு பொழுதுகளைச் சொல்லுவார்கள். ஒளி அடங்கும் ஏற்பாடு, இருள் தொடங்கும் மாலை ஆகியவை சந்திக்கும் நேரமும், இருள் குறையும் வைகறை, ஒளி தோன்றும் காலை ஆகியவை சந்திக்கும் நேரமும் மாந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் நம்மை ஈர்க்கின்றன. எல் எனும் சூரியன் பட்டுக்கொண்டே வரும் நேரம் எற்பாடு. அந்த எற்பாட்டிற்கு அப்புறம் உள்ள 10 நாழிகைகளில் சூரியன் முற்றிலும் வலுவிழந்து தொய்ந்து போய் விடுகிறான். இருள் தொடங்குகிறது. அந்த நிலையில் இருளும் ஒளியும் முயங்கிக் கிடக்கும் 10 நாழிகைகள் மயங்குகின்ற நேரமாய், மயலுகின்ற நேரமாய், மயலையாய், மாலையாய் ஆகிப் போகிறது. பகலா, இரவா என்று மலங்குகின்ற நேரம் தான் மாலை. மலங்குவது என்பதும் மயங்குதலே. மல்>மர்>மருட்டு என்ற சொல்லும் இந்த வேரில் இருந்து எழுந்ததே.
நம்முடைய மாலையின் இன்னொரு பெயர் தான் தொய்யம். சூரியன் குறைப்பட்டுப் போன நேரத்தை தொய்யம்>தோயம்>தோஷம் என்றே வடமொழி அழைக்கிறது
நீங்களும் இந்த தளத்தில் சுற்றிவந்து தமிழ்த்தேனைச்
சுவையுங்களேன்.

No comments:

Post a Comment