இன்று
என்று ஒரு வலைதளத்தைப் பார்த்துப் படித்துச் சுவைத்துக் கொண்டிருந்தேன். தமிழ் மொழியில் ஒரு அற்புதமான ஒரு தளம். தமிழகத்தைச் சேர்ந்த தேனி நகரத்தில் இருந்து தமிழ் மொழிக்காக ஒரு அற்புதமான தளம். ஒரு தமிழனுக்கு என்ன வேண்டும் என்பதை ஆய்ந்து அருமையாகப் பட்டியல் இட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இன்று நான் பார்த்த போது மின் நூல்கள் பற்றிய தலைப்பில் தினசரி இராமாயணம் கூற எளிதாக சில பக்கங்களில் ஒரு அன்பர் தமிழில் கவிதை வடிவில் இராமயானதைக் கொடுத்து இருந்தார். இன்னொரு நண்பர் விநாயகர் நான்மணி மாலை என்று எளிய தமிழில் கணபதி தோத்திரதைக் கொடுத்து இருந்தார். அதிலே கதைகள் - சமையல் குறிப்புகள் - அருமையான குறுந்தகவல்கள் - தமிழ் மென்பொருட்கள் பற்றிய தகவல் - இந்திய நாட்டு சட்டங்கள் - இப்படி பல தகவல்கள். தமிழர்களே - உங்களுக்காக உள்ள இந்த தளத்தை முழுமையாக பயன்படுத்துங்கள்.
பின்னர் இப்போது நான் வெளிநாட்டில் இருப்பதால் தமிழ் நாட்கள் - ஆங்கில தேதிகளுக்கு சரியான தமிழ் தேதி தெரியவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு தளத்தைப் பார்த்தேன். அற்புதம். சாதக உலகத்தை நம்பும் நண்பர்களுக்கு - வானவியல் பற்றி தெரிந்து கொல்ல விரும்பும் நண்பர்களுக்கு - திருமணப் பொருத்தம் தெரிந்து கொல்ல நினைக்கும் பெற்றோருக்கு உதவும் வகையில் மீன் -அது தான் நட்சத்திரம் என்று சொன்னால் தானே புரியும் - விண்மீன் என்ன என்று கொடுத்தால் பொருத்தத்தைத் தரும் பட்டியல் உள்ளது. எமகண்டம், இராகு காலம் எல்லாம் நாளிதழில் ஒரு குறிப்பிட்ட கிழமைக்கு குறிப்பிட்ட நேரத்தைக் கொடுத்து இருப்பார்கள். இங்கே தினசரி பார்க்கக் கூடிய வகையில் துல்லியமாக கொடுத்து உள்ளார்கள். ஒரு ஊருக்கு அயனாம்சம் பார்க்க வேண்டுமா? கிடைக்கிறது உடனே. எல்லாம் இலவசம். போய் உலாவிப் பார்க்கலாமே.
என்று ஒரு தளம். அதிலே அவ்வளவும் கிடைக்கிறது. பொறுமையாகப் போய்ப் பாருங்கள்.
இறைவனைப் பற்றி சில பாடல்களைப் படிக்க வேண்டும் என்று நினைத்தபோது ஒரு தளம் தென்பட்டது. அதுதான் .இப்படி பல நல்ல விடயங்கள் உள்ளன இந்த தளத்தில்.
மிக அழகான தமிழில் சில பாடல்களைக் கொடுத்து உள்ளார்கள்.
நம்பி என்பவர் கொடுத்துள்ள ஒரு பதிவு. அருமையானது. படித்துச் சுவையுங்கள்.
தம் வாழ்நாளில் ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளைச் சமண சமயத்தவராக இருந்து கழித்தவர் திருநாவுக்கரசர் பெருமான்; அகவை ஐம்பது ஆண்டு கடந்த பின்னரே அருமைச் சைவ சமயத்துக்குத் திரும்பியவர்.
`இளமைக் காலத்தில் சிவபெருமானை வணங்காமல் வாழ்நாளை வீணாக்கிவிட்டேன்' எனத் தெளிவாகவே சொல்கிறார் அப்பர். `முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை' என்பது பெருமானாரின் வரலாற்றுக் குறிப்பு.
முன்ன மேநினை யாதொழிந் தேனுனை
இன்னம் நானுன சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி
மன்ன னேஅடி யேனை மறவலே. (5.57.1)
இன்னம் நானுன சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி
மன்ன னேஅடி யேனை மறவலே. (5.57.1)
முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி
மன்னனே அடியேனை மறவலே.
`முன்னரே உன்னை நினையாது ஒழிந்தேன்; இன்னமும் உன் திருவடிகளை நான் நன்கு ஏத்தவில்லை. செந்நெல் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள மன்னனே! அடியேனை மறவாதே.'
உன - உன்னுடைய
சேவடி - செம்மையான திருவடி
ஏத்திலேன் - ஏத்தவில்லை; போற்றவில்லை
திருக்கோளிலி - ஊரின் பெயர்: திருக்குவளை என வழங்கப்பெறும்
மறவலே - மறவாதே
இறைவர் திருவடிகளைப் போற்றிப் பல்லாயிரம் பாடல்கள் பாடிச் செந்தமிழால் வணங்குகிறார் அப்பர்; ஆயினும் தம் திருத்தொண்டில் பெருமானாரின் உள்ளம் நிறைவு கொள்ளவில்லை.
`இமைப்பொழுதும் நெஞ்சைவிட்டு நீங்காச் சேவடிகளை வணங்கியது போதாது; இன்னும் இன்னும் இன்னும் வணங்கவேண்டும்' என்கிறார்.
மெய்யடியார்களின் அன்பின் திறம் இது. `தேனாய் இனிய அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமானை வணங்குவதற்கு அளவில்லை' என்கிறார் அப்பர்.
பேரன்பும் பேரருளும் வாய்ந்த மெய்யடியாராக விளங்கினாலும் தம்மை மிகவும் எளியவராகவே கருதுவார் அப்பர்.
`சிவபெருமானே, உன்னை வணங்கும் மெய்யடியார்கள் பலர். யானோ மிகவும் எளியவன்; உன்னை முன்பு வணங்காது இருந்தவன்; இன்னும் செம்மையாக வணங்காதவன்; ஆயினும் அடியேனை மறந்துவிடாதே! என்னையும் நினைந்து அருள்செய்வாயாக!' எனப் பணிந்து வேண்டுகிறார்.
இறைவரை வணங்காது இருந்து, இறையருளால் உண்மை உணர்ந்து, இறைவரை வணங்கத் தொடங்கியவர்கள் இத்திருப்பாடலை நாள்தோறும் உள்ளம் உருக ஓதி வழிபடுதல் நன்று.
அடுத்த பதிவில் நான் இரசித்த தளங்களைக் கூறுகிறேன்.
No comments:
Post a Comment