Thursday, September 23, 2010

TAMILAR NADU

பண்டைய தமிழகத்தில் பாண்டிய நாடு இருந்தது - சோழ நாடு இருந்தது - சேர நாடு இருந்தது - பின்னர் பல்லவ நாடு இருந்தது.   இப்படித் தான் நாடுகள் இருந்தனவே தவிர தமிழ்நாடு என்று ஒரு நாடு இல்லை.  இருந்த மன்னர்களும் ஒருவரை ஒருவர் வெல்லவே முயன்றனர்.  உலகம் பூராவும் பரவியும் - இன்றைய கால கட்டத்தில் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை.  மிகவும் வருத்தப்பட வேண்டிய விடயம்.
நான் கல்லூரியில் படித்த போது அகிலன் அவர்கள் எழுதிய "வேங்கையின் மைந்தன்" என்று ஒரு அருமையான புதினத்தைப் படித்து உள்ளேன்.  அப்போதெல்லாம்
"கல்கி"  "குமுதம்"   போன்ற வார இதழ்களில் பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன், யவன ராணி, கடல் புறா போன்று தமிழனின் பெருமை பேசும் புதினங்கள் வந்த காலம்.  எனவே படித்த எங்களுக்கும் அந்த உணர்வு இருந்தது.     அந்த கால கட்டங்களில் திரு.அகிலன் அவர்கள் படைத்த "வேங்கையின் மைந்தன்" புதினத்தைப் படிக்க நேர்ந்தது.  அதிலே திரு அகிலன் அவர்கள் கூறுவார்கள. 
 எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
                இருந்ததும் இந்நாடே அதன்
                முந்தைய ராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
                முடிந்ததும் இந்நாடே - இதை
                வந்தனை கூறி மனதிலிருத்தி என்
                வாயுற வாழ்த்தேனோ
                                        - பாரதி

     ஆம்; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தமிழ்த் திருநாடு
பெற்றிருந்த பேற்றை நினைக்கும் போது நம்முடைய மனம் பொங்கிப்
பூரிக்கின்றது. நெஞ்சு பெருமிதத்தால் விம்முகின்றது. எந்தாய் வாழ்க!
எந்தாய் வாழ்க!என்று உள்ளம் குளிர வாய் வாழ்த்தத் துடிக்கின்றது.
     கங்கை வளநாட்டிலே தமிழரின் புகழ் மண்டி வளர்ந்தது. கடல் கடந்த
கடாரத்திலும், ஸ்ரீவிஐயத்திலும், பழந்தீவு பன்னீராயிரத்திலும், ஈழத்தின்
எண்திசையிலும் அவர் பெருமையே பேசப்பெற்றது. தமிழகத்தின் தனிக்
கொடியாகச் சோழர்களின் புலிக்கொடி இந்தப் பாரெங்கும் பட்டொளி வீசிப்
பறந்த நம்முடைய மாபெரும் பொற்காலம் அது. பிற்காலச் சோழர்களில் தனித்தன்மை பெற்றுத் தன்னிகரில்லாமல்
திகழ்ந்த மாவீரர் இராஜராஜ சோழர், வீரத்தில் வேங்கையாகவும் அரசியல்
பெருந்தன்மையில் சிங்கமாகவும் விளங்கியவர். வேங்கையின் மைந்தன்
இராஜேந்திரரோ தம் தந்தை அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் மிக
உயர்ந்த மாளிகையை எழுப்பியவர். அந்தத் தமிழ் சாம்ராஜ்ய மாளிகைக்
கோபுரங்களில் எண்ணற்ற வெற்றிப் பொற்கலசங்களை ஏற்றி வைத்தவர்.

பிற்காலச் சோழர்களில் தனித்தன்மை பெற்றுத் தன்னிகரில்லாமல்
திகழ்ந்த மாவீரர் இராஜராஜ சோழர், வீரத்தில் வேங்கையாகவும் அரசியல்
பெருந்தன்மையில் சிங்கமாகவும் விளங்கியவர். வேங்கையின் மைந்தன்
இராஜேந்திரரோ தம் தந்தை அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் மிக
உயர்ந்த மாளிகையை எழுப்பியவர். அந்தத் தமிழ் சாம்ராஜ்ய மாளிகைக்
கோபுரங்களில் எண்ணற்ற வெற்றிப் பொற்கலசங்களை ஏற்றி வைத்தவர்.
இன்றைய நிலையை உற்று நோக்கினேன். இரண்டு சொட்டுக் கண்ணீர் மணிகள் என் விழிகளில் திரண்டன. அவற்றை அரும்பாடுபட்டு என் இதயத்திலே தேக்கி வைத்துக் கொண்டேன். அந்தக் கண்ணீர் சொல்லும் கதையே இந்த வேங்கையின் மைந்தன்.அதே போல புரட்சித் தலைவர் அவர்களின் "கலங்கரை விளக்கம்" திரைப்படத்தில் பாரதிதாசன் அவர்களின் அருமையான பாடல் ஒன்று வரும். "சங்கே முழங்கு எங்கள் வாழ்வும் எங்கள் வழமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு" என்று வரும்.  அதிலே ஒரு வரி. "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு".  இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் என்று?  காலக் கடவுளே கண் திறவாய்.  அப்படிப்பட்ட காலத்தைக் கொண்டு வருவாய். 
அகிலன் அவர்களின் புதினத்தில் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் இது.
தமிழ்நாட்டுக்குள்ளே வேண்டுமானால் நாம் சோழர், சேரர், பாண்டியர் என்று பிரித்துப் பேசிக் கொள்ளலாம். தமிழ் நாட்டுக்கு வெளியே நாமெல்லோரும் தமிழர்தாம். யாருக்கு அவமானம் நேர்ந்தாலும் அது தமிழ்க் குலத்துக்கு நேர்ந்த அவமானம்."
குருதியைச் சூடாக்கும் பொருத்தமான வசனம்.  இதைப் போலவே இரண்டு கதாபாத்திரங்கள் மூலம் மூவேந்தர்கள் பகை எப்படி இருந்தது - இணைந்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எழுதுவார்.  நீங்களே படியுங்கள்.
சோழர்களின் தயவால் நாடாளும் உரிமை பெற்ற இந்தப் பாண்டிய மீன்கள் புலியிடம் துள்ளப் பார்க்கின்றன. சேரனின் ஒடிந்துபோன வில் தன்னை நிமிர்த்திக்கொண்டு புல்லின் மீது அம்பெய்யப் பார்க்கிறது. வீரமல்லா! மீன்களால் புலியை விழுங்கவும் முடியாது. ஒடிந்த வில் இனி என்றுமே நிமிரப் போவதும் இல்லை. இவற்றைக் கண்டு அஞ்சும் அளவுக்கு நீ கோழையாகி விட்டாயா?”

"தமிழ் நாட்டில் மூவேந்தர்களுக்குள் ஒற்றுமை மட்டும் இருந்திருந்தால் நாம் இந்த உலகத்தையே வென்றிருப்போம், ஒற்றுமை கெட்ட குலம் நம் தமிழ்க்குலம்.
இன்றாவது அந்த நிலை மாறியதா? இல்லவே இல்லை.  அண்டை நாட்டில் அல்லல் படும் நமது தமிழ் மக்களின் துயர் துடைக்க நாம் ஒன்று சேரவில்லை.  வீரம் செறிந்த தமிழர்களை ஒடுக்க ஒருவகையில் நாமே காரணமாகவும் இருந்தோம்.  என்று இந்த நிலை மாறும்?

No comments:

Post a Comment