Tuesday, July 26, 2011

THIRIKADUGAM - திரிகடுகம் பாடல்,

ஒருவனுடைய செல்வத்தை அழிப்பது எது?  தன்னைத் தானே போற்றிக் கொள்ளுதல்,  அடக்கமில்லாமல் எளியவர் மேல் கோபம் கொள்ளுதல், பார்த்ததை எல்லாம் பெற்று இன்பம் துய்க்க வேண்டும் என்று விரும்புவது இப்படிப்பட்ட குணங்கள் ஒன்று சேர்ந்தால் எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் எளிதில் வறியவன் ஆகிவிடுவான்.

தன்னை வியந்து தருக்கலும், தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் முன்னிய
பல்பொருள் வெஃகுஞ் சிறுமையும் இம் மூன்றுஞ்
செல்வம் உடைக்கும் படை.

(தருக்கு என்றால் செருக்கு கொள்ளுதல்,  கொன்னே என்றால் தேவையில்லாமல், வீணாக, வெஃகுதல் என்றால் விரும்புதல்)

No comments:

Post a Comment